
சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு!
ஹாலிவுட்டில் வெளியான காட்ஷில்லா, அவதார் போன்ற படங்களில் பணியாற்றிய டிஜிட்டல் நிறுவனமே இந்த வாடிவாசல் படத்திற்கும் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெற்றி மாறன் விடுதலை படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டதால் இந்த வாடிவாசல் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளில் ஈடுபட்டிருக்கிறாராம். அதனால் சூர்யா தனது 42வது படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் உடனடியாக வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாம். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை எஸ். தாணு தயாரிக்கிறார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!