
வாரிசு இயக்குனர் வம்சியை கட்டித் தழுவி வாழ்த்திய அவரது அப்பா
விஜய் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த "வாரிசு" அவரது இயக்கத்தில் வந்த இரண்டாவது தமிழ்ப் படம். இப்படம் நேற்றுதான் தெலுங்கில் "வாரசுடு" என்ற பெயரில் டப்பிங் ஆகி பிரம்மாண்டமாக வெளியானது. நேற்று வம்சி பைடிபள்ளி "வாரசுடு" படத்தை அவரது அப்பாவுடன் தியேட்டரில் பார்த்தார். படம் முடிந்த பின் வம்சியின் அப்பா தன் மகனைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீருடன் வாழ்த்தினார்.
அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, “வாரசுடு" படத்தை இன்று அப்பா பார்த்து மகிழ்ந்தது எனது மிகப் பெரிய சாதனை. எனது வாழ்நாள் முழுவதும் எனது மனதில் வைத்து இத்தருணத்தைப் போற்றுவேன். நீங்கள்தான் என் ஹீரோ அப்பா. உங்களை எப்போதும் நேசிக்கிறேன்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கிலும் "வாரிசு" படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதென அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!