
வாரிசு பாடல்கள் குறித்து விஜய் ரசிகர்களிடம் எழும் சந்தேகம் ?
சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளிவந்த "ப்ரின்ஸ்" படத்தை தெலுங்கு இயக்குனரான கேவி அனுதீப் இயக்கியிருந்தார். தெலுங்கில் தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தமன் இசையமைத்துள்ளார். "ப்ரின்ஸ்" படத்தின் பாடல்கள் யு டியுபில் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றிருந்தாலும் படத்துடன் அவற்றைப் பார்க்கும் போது ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. எனவே, விஜய் ரசிகர்களுக்கு "வாரிசு" பாடல்கள் எப்படி இருக்கப் போகிறது என்ற சந்தேகம் இயல்பாக வந்துவிட்டது. "வாரிசு படத்திற்கு தமன் தான் இசையமைக்கிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார்.
விஜய் படங்கள் என்றாலே அவற்றில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக அமைந்துவிடும். தீபாவளி நாளன்று "வாரிசு" படத்தின் முதல் சிங்கள் வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது. ஆனால், அன்று வெளியாவது சந்தேகம் என்றும் மற்றொரு தகவல் உண்டு. மாறாக, தீபாவளி அன்று "வாரிசு" படத்தின் மிக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகும் என்கிறார்கள்.
விஜய் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆவல் தமனுக்கு எப்போதும் உண்டு. ஏற்கெனவே, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த படத்திற்கு தமன் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அந்தப் படம் அப்படியே நின்று போனது. உடனடியாகக் கிடைத்த அடுத்த வாய்ப்பால், விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இசையமைப்பாளர் தமன் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்ப்போம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!