
சர்தார், ஜவான் ஒரே கதையா? நக்கலாய் கண்டித்த எடிட்டர்
அந்தப் பதிவை பகிர்ந்து நக்கலாய் ஒரு கமெண்ட் அடித்துள்ளார் "சர்தார்" படத்தின் எடிட்டர் ரூபன். “நமது பள்ளி நாட்களில் என்னைப் போன்று பலரும் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகிய இருவரும் "காந்த்" என்பதால் அண்ணன், தம்பி என நினைத்திருப்போம். அதன் பிறகு நான் வளர்ந்துவிட்டேன். ஆனால், இன்னும் சிலர் அந்த குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறார்கள். இங்க "ரா" ஏஜன்ட் வச்சிட்டு இஷ்டத்துக்கு ராவா அடிச்சி விடக் கூடாது,” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “படத்தோட கதை என்னன்னு நமக்கே இன்னும் தெரில, இவங்களுக்கு மட்டும் ஏழாவது அறிவு இருக்கும் போல…மோசமான ஸ்பை, ரா ஏஜென்ட்டா இருக்காங்க,” என கிண்டலடித்துள்ளார்.
அட்லீக்கு தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு வந்த கதைகளைத்தான் திரும்பவும் மாற்றி எடுப்பது பழக்கம். ஆனால், ஒரே சமயத்தில் தமிழில் எடுக்கப்பட்டுள்ள ஒரு கதையை அவர் ஏன் ஹிந்தியில் எடுக்கப் போகிறார்?.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!