
இன்று மாலை ஏகே 61 அப்டேட்?
இன்று மாலை "ஏகே 61" பற்றிய அப்டேட் வெளியாகும் என்று தெரிகிறது. "நேர்கொண்ட பார்வை, வலிமை" படங்களுக்குப் பிறகு வினோத், அஜித் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம். அந்தப் படங்களுக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவை மாற்றிவிட்டு இந்தப் படத்திற்காக மீண்டும் ஜிப்ரான் உடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் வினோத்.
"அசுரன்" படத்திற்குப் பிறகு மஞ்சு வாரியர் நடிக்கும் தமிழ்ப் படம். இதுவரையிலும் "ஏகே 61" என்றே அழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்திற்கு "துணிவே துணை" என டைட்டில் வைத்துள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தது.
இன்று தலைப்பு அறிவிப்புடன் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகும் எனத் தெரிகிறது. அதில் படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு இருக்குமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!