
இந்தியன் 2 பட்ஜெட்டைக் குறைத்த ஷங்கர் ?
இதனிடையே, எஞ்சியிருக்கும் காட்சிகளைப் படமாக்க போடப்பட்ட பட்ஜெட்டில் பெரும் தொகையை ஷங்கர் குறைத்துவிட்டாராம். அதனால் தயாரிப்பு நிறுவனமும் அந்தத் தொகையை உடனடியாக வழங்கத் தயாராகிவிட்டார்களாம். தற்போது சென்னையில் இப்படத்திற்காக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் பிரம்மாண்ட அரங்கம் தயாராகி வருகிறது. அதில் படத்தின் பல முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பை முடித்துத் தருவதாக ஷங்கர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாம். 2023 கோடை விடுமுறையில் "இந்தியன் 2" வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!