
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் படம் சென்னையில் ஆரம்பம்
ரஜினிகாந்த்தின் அடுத்த படமாக நெல்சன் திலீப் குமார் இயக்கும் "ஜெயிலர்" படம் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனாலும், திரைக்கதை முழு வடிவம் பெற சில மாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று படப்பிடிப்பு ஆரம்பமாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"காலா, பேட்ட, தர்பார், அண்ணாத்த" ஆகிய படங்களின் முதல் நாள் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறாமல் ஐதராபாத், மும்பை, டார்ஜிலிங் ஆகிய இடங்களில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி உள்ளது. இப்படத்திற்காக சில பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகளின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!