
விஜய்க்கு வில்லியாகும் சமந்தா?
ஜூலை 18, 2022
Advertisement
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66-வது திரைப்படமாக உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு விஜய்யின் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் கைதி பட பாணியில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தெறி, மெர்சல், கத்தி போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் சமந்தா வில்லியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!