
‛சிவாஜி 15 ஆண்டு : ரஜினி - ஷங்கர் சந்திப்பு
ஒரு பக்கா கமர்ஷியல் படமாக உருவான இப்படத்தில் நடிப்பு, பிரம்மாண்டம், சென்டிமென்ட், சிறப்பான பாடல்கள் என அனைத்தும சிறப்பாக அமைந்து படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. பாடல் காட்சிகளுக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கங்கள் அதில் ரஜினிகாந்த், ஸ்ரேயாவின் நடனம் ஆகியவை இன்றும் வசீகரமானவை.
இந்நிலையில் சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதையொட்டி நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் தனது மகள் அதிதி உடன் சென்று பார்த்துள்ளார் ஷங்கர். அதுபற்றி, ‛‛சிவாஜி படத்தில் ரஜினி உடன் இணைந்து பணி செய்தது மறக்க முடியாத அனுபவம். அவரது ஆற்றல், பாசம் அனைத்தும் எனது நாட்களை இனிமை ஆக்கியது"" என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார் ஷங்கர்.
அதேப்போன்று ரஜினி உடன் எடுத்த செல்பி போட்டோவை பகிர்ந்து தனது மகழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஷங்கர் மகள் அதிதி. தற்போது இவர் கார்த்தி உடன் விருமன் படத்தில் நாயகியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!