
ஜுலையில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு
இரண்டு பாகங்களாகத் தயாராகி வரும் இப்படத்தின் முதல் பாகம், செப்டம்பர் மாதம் வெளியாகிறது. கடந்த வாரம் படத்தின் இயக்குனர் மணிரத்னம் பிறந்தநாளின் போது படம் பற்றிய அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்போது எதுவும் வெளியாகவில்லை.
இன்று படம் பற்றிய அப்டேட் தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கான டீசர் தற்போது உருவாகி வருகிறதாம். ஜுலை மாதம் பிரம்மாண்டமான விழாவாக நடத்தி டீசரை வெளியிட உள்ளார்களாம்.
"பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2" போன்ற படங்களின் வரிசையில் இந்த "பொன்னியின் செல்வன்" படமும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!