மின்மினி - ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ஒரு ஆச்சரியம்
மே 11, 2022
Advertisement
தமிழ் சினிமா உலகில் இதற்கு முன்பு இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். ஒரு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ஆறு வருடங்கள் காத்திருந்து படமாக்க உள்ளார்கள்.
“பூவரசம் பீப்பீ, சில்லு கருப்பட்டி, ஏலே" படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கி வரும் படம் "மின்மினி". இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த 2016ம் வருடம் நடைபெற்று முடிந்தது. இப்படத்தில் நடிப்பவர்கள் இரு வேறு கால கட்டங்களில் நடிப்பதால் அவர்கள் வளர்வதற்காக ஆறு வருடங்கள் காத்திருந்து படமாக்க உள்ளார் ஹலிதா. பொதுவாக இரு வேறு கால கட்டங்களின் படத்தின் கதை இருக்கும் போது வெவ்வேறு நடிகர்களை நடிக்க வைப்பார்கள். ஆனால், ஹலிதா அதே நடிகர்களை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஆறு ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்.
இது குறித்து நேற்று அவர், 2016ம் ஆண்டில் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த போது பதிவிட்டதை மீண்டும் ரிடுவீட் செய்து, “ஆறு வருடங்களுக்கு முன்பு முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படத்தில் படத்தில் பள்ளி சிறுவர்களாக நடிப்பவர்கள், இப்போது வளர்ந்து இளைஞர்களாக ஆகியிருப்பார்கள். அதற்காகத்தான் அவர் இத்தனை ஆண்டுகள் காத்திருந்து படமாக்குகிறார். வேறு எந்த மொழித் திரைப்படத்திலும் கூட இத்தனை ஆண்டு காத்திருந்து படமாக்கிய தகவலை இதுவரை கேள்விப்பட்டதில்லை.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!