
மீண்டும் திருப்பதியில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா வழிபாடு : திருமண ஏற்பாடு என தகவல்
இந்நிலையில் ஒருவாரத்திற்குள் மீண்டும் இரண்டாவது முறையாக இன்று(மே 7) விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி திருப்பதியில் வழிபாடு நடத்தி உள்ளனர். இதை வைத்து இவர்கள் திருமணத்திற்கு தயாராகி வருவதாக சினி உலகில் தகவல் பரவி வருகிறது. அதாவது ஜூன் 9ல் இவர்களுக்கு திருமணம் என்றும், அதற்கான பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி நயன்தாராவின் மக்கள் தொடர்பாளரை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரிலீஸாவதற்கு முன்பும், பின்பும் இருவரும் சென்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். மற்றபடி திருமணம் பற்றிய எந்த தகவலும் உறுதியாகவில்லை"" என்றார்.
அதேசமயம் இவர்கள் விரைவில் திருமணம் செய்ய போவதாக திரையுலகினர் பேசி வருகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட இருவரும் வாய் திறந்தால் மட்டுமே திருமணம் எப்போது என்பது தெரிய வரும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!