
சூர்யாவுக்கு புரட்சி நாயகன் பட்டம் கொடுத்த சத்யராஜ்
இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய சத்யராஜ், ‛‛ஜெய் பீம் படத்தில் சூர்யா நடித்தது மிகப்பெரிய துணிச்சலான விஷயம். அதனால் அவருக்கு புரட்சி நாயகன் என்ற பட்டத்தை கொடுக்கிறேன். மேலும், சூர்யா தனது படங்களில் பெரியார், அம்பேத்கரின் கருத்துக்களை அதிகமாக வெளிப்படுத்த வேண்டும். அவரது ரசிகர்களும் அதை பின்பற்ற வேண்டும். எம்ஜிஆரைப் போன்று திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் சூர்யா ஒரே மாதிரி இருக்கிறார். அதனால் அவருக்கு புரட்சி நாயகன் என்ற பட்டம் மிகப் பொருத்தமானது என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!