
கமல்ஹாசன் இடத்தில் சிம்பு?
அவருக்குப் பதிலாக யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள் என ஒரு கேள்வி இருந்தது. டிவியில் ஒளிபரப்பான போது கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கமல்ஹாசன் ஒரு வாரம் மட்டுமே விலகியிருந்தார். அப்போது அவருக்குப் பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அதனால், அவரே இப்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், தற்போது நடிகர் சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது. ஓடிடி தளத்தில் நிகழ்ச்சிக்குப் பெரிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இன்னும் நான்கைந்து வாரங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். எனவே, சிம்புவுக்கு ஒரு பெரிய தொகையை சம்பளமாகக் கொடுக்கவும் நிகழ்ச்சிக் குழுவினர் தயாராக இருக்கிறார்களாம். அதற்கு சிம்புவும் சம்மதித்துவிட்டதாகத் தகவல். இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வரலாம்.
டிவியில் ஒளிபரப்பான 5வது சீசனுக்கு முந்தைய சீசன்களைப் போல அதிக வரவேற்பில்லை. கமல்ஹாசன் அரசியலில் இறங்கிய பிறகு கட்சி சார்புள்ள ரசிகர்கள் நிகழ்ச்சியைப் பார்க்க விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள். அதனால், அடுத்த ஆறாவது சீசனை சிம்புவே தொகுத்து வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!