
மன்னிப்பு கேட்டது தைரியமா?; சித்தார்த் விவகாரத்தில் கஸ்தூரி கருத்து
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையை கேட்டுக் கொண்டது. இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிய நிலையில் நடிகர் சித்தார்த், சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார். சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சாய்னா, ‛அவரின் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும், ஒரு பெண்ணை இதுபோன்று குறிவைத்து தாக்கக் கூடாது. எனினும் அவர் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி. சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிப்பாராக," எனக் கூறியிருந்தார்.
சித்தார்த்தின் இந்த மன்னிப்பு அறிக்கைக்கு பல்வேறு விதமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் ‛இந்த அறிக்கை நன்றாக எழுதப்பட்டுள்ளது. பொது வெளியில் மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும்" என பாராட்டியிருந்தார். இதனை பார்த்த நடிகை கஸ்தூரி, ‛தைரியமா? எல்லாத் தரப்பிலிருந்தும் சீற்றம்தான் எழுந்துள்ளது" என குறிப்பிட்டு தன் பங்குக்கு தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!