
இந்தியன் 2 பட த்தில் குரு சோமசுந்தரம்?
இதனிடையே, இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்ததது. இந்நிலையில் இரு தரப்பினரும் சமாதானம் ஆனதால் விரைவில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் குரு சோமசுந்தரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் 2 படத்தில் நடிகர் விவேக் நடித்தார். எதிர்பாராதவிதமாக அவர் இறந்துவிட்டதால் அவரது வேடத்தில் சோமசுந்தரம் நடிக்கலாம் என கூறப்படுகிறது.
குரு சோமசுந்தரம் ஜோக்கர் படத்தில் நாயகனாக நடித்தவர். தொடர்ந்து ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி படத்தில் இவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!