
மீண்டும் ஜெயம் ரவி - கல்யாண் கூட்டணி
டிச 11, 2021
Advertisement
மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜெயம்ரவி. அதையடுத்து ஏற்கனவே தன்னை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் தனது 28ஆவது படத்தில் நடித்து வருகிறார் . சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் ஒரு விளையாட்டை மையப்படுத்திய கதையில் இப்படம் உருவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சாம். சி எஸ் இசை அமைக்கும் இந்த படத்தை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்திற்காக தாடி வைத்த ஸ்டைலிஷான கெட்டப்பில் ஜெயம் ரவி நடித்து வரும் சில புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!