
சிம்புவுக்கு வில்லனாகும் மலையாள இளம் நடிகர்
பகத் பாசில், டொவினோ தாமஸ், ஜோஜு ஜார்ஜ் என பட்டியல் நீள்கிறது. இந்த வரிசையில் சிம்புவின் வெந்து தணிந்து காடு படத்தில் மலையாள இளம் நடிகர் நீரஜ் மாதவ் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். படத்தில் அவர் சிம்புவுக்கு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர் பகுதியில் ஒரு மாதம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!