
மகிழ்ச்சியை கொண்டாட தவறக்கூடாது : நயன்தாரா - விக்னேஷ் சிவனின் தீபாவளி கொண்டாட்டம்
இந்த நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை நாளையும் நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். அதுகுறித்த வீடியோ ஒன்றையும் இன்ஸ்டா கிராமில் வெளியிட்டுள்ளனர். மேலும், விக்னேஷ்சிவன் பதிவிட்டுள்ள செய்தியில், மகிழ்ச்சி என்ற பயிற்சியை ஒவ்வொரு நாளும் செய்யுங்கள். மகிழ்ச்சியானது பட்டாசுகளைப்போன்று வெடிக்க வேண்டும். அதோடு, நம்முடைய இலக்கு எதுவாக இருந்தாலும் அதை அடைவதற்கு விடா முயற்சி செய்ய வேண்டும். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் மகிழ்ச்சியை கொண்டாட தவறக்கூடாது. வாழ்க்கையை கொண்டாடி மகிழத்தான் பண்டிகைகள் வருகின்றன. நம்முடைய வழக்கமான பணிகளில் இருந்து சிறிதுநேரம் நல்ல விசயங்களைப்பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள். அப்படி இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள என்று பதிவிட்டுள்ளார் விக்னேஷ்சிவன்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!