
இணையதளங்களில் லீக் - பீஸ்ட் படக்குழு அதிர்ச்சி
நடிகர் விஜய்யின் 65-வது படம் "பீஸ்ட்". நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு காட்சி ஒன்று லீக்காகி உள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். விஜய்யின் மாஸ்டர், சர்கார், பிகில் படங்களுக்கும் இதேபோல் காட்சிகள் லீக் ஆகின.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!