
சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி
வரலட்சுமி முதன்முறையாக ‛சரஸ்வதி" என்ற ஒரு படத்தை இயக்கி அதில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை தனது தங்கை பூஜாவுடன் இணைந்து தோசா டைரீஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இதில் வரலட்சுமியுடன் ராதிகா சரத்குமார், பிரியாமணி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.
நிறைவு நாளில் எடுத்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வரலட்சுமி சரத்குமார். ‛‛இது ஒரு சிறந்த பயணம். படப்பிடிப்பில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி"" என பதிவிட்டு இருக்கிறார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!