
வரமாட்டேன்னு சொல்வேன், ஆனா வந்துருவேன்: உதயநிதி
"நெஞ்சுக்கு நீதி" படத்தில் நடிக்கும்போது, "மாமன்னன்" எனது கடைசி படம் என்பதில் உறுதியாக இருந்தேன். இப்போதும் உறுதியாக இருக்கிறேன். முதலில் நான் சினிமாவுக்கு வரமாட்டேன் என்றேன். பிறகு வந்தேன். அடுத்து, நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றேன். ஆனால், அரசியலுக்கு வந்து அமைச்சராகவும் ஆகிவிட்டேன். இப்போது என் முன்பு மக்களுக்கான பணிகள் நிறைய காத்திருக்கிறது. அவற்றை எல்லாம் செய்து முடிக்க வேண்டும்.
கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நான் நடிப்பதாகவும் வெற்றிமாறன் திரைக்கதை எழுதுவதாகவும் இருந்தது. நான் அமைச்சரானவுடனே கமலிடம் இப்படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று சொன்னேன். "அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். திரைப்பணியை விட, மக்கள் பணி மகத்தானது. இந்தக்கதை உங்களுக்காக காத்திருக்கும்” என்று சொல்லி என்னை வாழ்த்தினார்.
"மாமன்னன்" படத்தில் வடிவேலுதான் மாமன்னன், நான் சாதாரண மன்னன். இந்த படம் மாரி செல்வராஜின் அரசியலை பேசுகிறது. நான் நடித்த படங்களிலேயே முக்கியமான படமாக எனக்கு பிடித்த படமாக மாமன்னன் இருக்கும். என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!