
சுல்தான் தயாரிப்பாளர் டுவிட்டரிலேயே பைரசி லின்க் பதிவு
டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இது போன்ற பைரசி லின்க்குகள் கொட்டிக் கிடக்கின்றன. கார்த்தி, ராஷ்மிகா நடித்து நேற்று முன்தினம் வெளிவந்த "சுல்தான்" படத்தின் பைரசி லின்க்கை அதன் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவின் டுவிட்டரில் கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார் ஒருவர். அதில், “சுல்தான்" படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
தன் பக்கத்தின் கமெண்ட்டிலேயே இப்படி ஒரு பதிவு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “அடேய், என் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரசி பிரமோட் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டீங்களா, இதோ வரேன்டா” எனப் பதிவிட்டுள்ளார்.
ஒரு தயாரிப்பாளரின் பக்கத்திலேயே பைரசி லின்க்கைப் பதிவிடும் அளவிற்கு பைரசி திருடர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்பது திரையுலகினருக்கு விடப்பட்டுள்ள மிகப் பெரும் சவால்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!