
சூரியின் கொட்டுக்காளி படப்பிடிப்பு நிறைவு
மே 22, 2023
Advertisement
நடிகர் சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை படம் வரவேற்பை பெற்றது. வெற்றிமாறன் இயக்கி இருந்தார். இதன் அடுத்தபாகம் செப்டம்பரில் ரிலீஸாக உள்ளது. விடுதலை முதல்பாக வெற்றியை தொடர்ந்து சூரி அடுத்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கொட்டுக்காளி. நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன இந்த படத்தை "கூழாங்கல்" பட இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. அதனை படக்குழுவினர்களுடன் உள்ள போட்டோ உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!