
இதை நம்பாதீங்க - சிபிராஜ்
ஏப் 24, 2021
Advertisement
சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என போலியாக விளம்பரம் செய்து ஏமாற்றும் கும்பல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்நிலையில் நடிகர் சிபிராஜ் படத்தில் நடிக்க ஆட்கள் தேவை என குறிப்பிட்டு விளம்பரம் ஒன்று வெளியாகி உள்ளது. இதுப்பற்றிய தகவல் தனது கவனத்திற்கு வர அந்த விளம்பரத்தை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு, ‛‛இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது ஒரு பொய்யான விளம்பரம். யாரும் நம்பாதீங்க. இதனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது, எச்சரிக்கையாக இருங்கள்"" என பதிவிட்டுள்ளார்.
Tags
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!