
நடிகர் ஜெய்சங்கர் பெயரிலான சாலை திறப்பு
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையை ‛ஜெய்சங்கர் சாலை" என பெயர் மாற்றப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ‛ஜெய் சங்கர் சாலை" இன்று திறக்கப்பட்டது. சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் இதை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஜெய்சங்கர் மகன் டாக்டர் விஜயசங்கர் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இதேப்போல் சென்னை, மந்தைவெளிப்பாக்கம் 5வது குறுக்கு தெருவிற்கு நாடக நடிகர் எஸ்வி வெங்கடராமன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சாலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!