
‛காந்தாரா கடவுள் கிண்டல் : ரன்வீர் சிங் மீது பாய்ந்தது வழக்கு
மேலும், சவுண்டி தெய்வத்தை "பெண் பேய்" என்று அவர் வர்ணித்ததாகவும், தெய்வீக கலை வடிவத்தை கிண்டல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பிறகும் கூட, தொடர்ந்து ரன்வீர் சிங் கிண்டல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் சவுண்டி சிங் பிரசாந்த் மேதல் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள புகார் மனுவில், "ரன்வீர் சிங்கின் செயல் திட்டமிட்டது, மற்றும் வன்மமானது. நீதி மற்றும் பாதுகாப்பின் வடிவமாக திகழும் காவல் தெய்வத்தை "பேய்" என்று சொன்னது, இந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் செயலாகும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த பெங்களூரு 1வது கூடுதல் தலைமை மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்ய ஹை கிரவுண்ட்ஸ் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை, வரும் ஏப்ரல் 8ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!