
அண்ணாத்த டப்பிங்கை தொடங்கிய ரஜினி
இந்நிலையில் மீண்டும் படக்குழு கோல்கட்டா சென்று மீதமுள்ள காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் டப்பிங்கைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் ஸ்டுடியோவில் டப்பிங் நடைபெற்று வருகிறதாம். மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்ணாத்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!