
அம்பானி இல்ல திருமணத்தில் ரஜினி நடனம்
கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரில் நடந்த கொண்டாட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள், தொழில் அதிபர்கள், ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து முன்னணி திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது. இதில் பாலிவுட் திரையுலகமே கலந்து கொண்டது. தமிழகத்தில் இருந்து ரஜினிகாந்தும், ஏ.ஆர்.ரஹ்மானும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தவிர நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர், மும்பையில் இருந்தபடி சூர்யா - ஜோதிகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, மகள் சவுந்தர்யா, மருமகன் விஷாகன், மற்றும் பேரனுடன் பட்டு வேட்டி சட்டை அணிந்து தமிழ் பாரம்பரிய முறைப்படி கலந்து கொண்டார். திருமண விழாவில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்கள் பலர் நடனமாடினர். யாரும் எதிர்பாராத வகையில் ரஜினிகாந்தும் நடனமாடினார். அவருடன் மணமகன் ஆனந்த் அம்பானி மற்றும் அம்பானி குடும்பத்தினர் ஆடினர். நடிகர்கள் அனில் கபூர், ரன்வீர் சிங் ஆகியோரும் இணைந்து நடனமாடினர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!