கடந்த ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்து பான் இந்திய படமாக வெளியான படம் "புஷ்பா 2" . இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைத்தது. இந்த நிலையில் புஷ்பா 2 படத்தை ஜப்பானில் வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் ஜப்பானில் ஜனவரி மாதத்தில் திரைக்கு வருகிறது என விளம்பர போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் இந்தியாவில் வசூல் ரீதியாக ஆர்.ஆர்.ஆர், பாகுபலி ஆகிய படங்களின் வசூலை முறியடித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!