
பத்து தல படப்பிடிப்பு நிறைவு : கேக் வெட்டி கொண்டாடிய சிம்பு
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த "மப்டி" படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கன்னியாகுமரி, பெல்லாரி, விசாகாப்பட்டினம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை விஜிபி கோல்டன் பீச்சில் நடைபெற்று வந்தது. இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி சிம்பு மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!