
விஜய் சேதுபதியின் ஸ்லம்டாக் படத்திற்கு புதிய சிக்கல் ?
பூரி ஜெகன்னாத், மகேஷ் பாபு கூட்டணியில் 2006ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் "போக்கிரி" அப்படத்தை மே மாதத்தில் ரீரிலீஸ் செய்வதாக திட்டமிட்டு வேலைகள் ஆரம்பமாகின. ஆனால், அந்தப் படத்தை மறுவெளியீடு செய்ய வினியோகஸ்தர்கள் தரப்பில் எதிர்ப்பு வந்திருக்கிறது.
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்த "லைகர்" படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை அடுத்த படத்தின் போது சரி செய்வதாக பூரி தெரிவித்திருந்தாராம். ஆனால், அடுத்து வெளிவந்த "டபுள் இஸ்மார்ட்" படத்தின் போதும் எதுவும் செய்யவில்லையாம். இதனால், "போக்கிரி" ரீரிலீஸ் செய்யக் கூடாதென அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதன் காரணமாக மகேஷ் பாபு நடித்த "அதிடி" படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள் எனத் தகவல்.
ஒரு ரீரிலீஸ் படத்திற்கே இவ்வளவு சிக்கல் எழுந்துள்ளது. பூரியின் அடுத்த படமாக விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள "ஸ்லம்டாக் - 33 டெம்பிள் ரோடு" படம் வெளிவர உள்ளது. அப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக வினியோகஸ்தர்களின் நஷ்டத்தை பூரி ஜெகன்னாத் சரி செய்தாக வேண்டும். இல்லையென்றால் அப்படம் வெளியாவதில் சிக்கல் வரும் என்கிறார்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!