
புடிச்சத பண்ணுனா லட்சம் பேர் சூப்பர் ஸ்டார் ஆகலாம் : நயன்தாராவின் ‛அன்னபூரணி டிரைலர் வெளியானது
பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்று ஆசைப்படும் நயன்தாரா, தனது பெற்றோரிடம் எம்பிஏ படிக்கப் போவதாக சொல்லிக் கொண்டு, சமையல்கலை படித்து வருகிறார். விஷயம் பெற்றோருக்கு தெரியும்போதும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாரா அசைவ உணவுகள் சமைக்கும் தகவல்கள் வெளியாகும்போதும் அவரது குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. இது போன்ற பல பிரச்சனைகளை கடந்து இந்த துறையில் நயன்தாரா எப்படி சாதனை செய்கிறார் என்பதுதான் இந்த அன்னபூரணி படத்தின் கதையாகும்.
டிரைலரில், தெருவுல கிரிக்கெட் விளையாடும் எல்லோரும் சச்சின் ஆக முடியாது. பஸ் கண்டக்டரா இருக்கிற எல்லோருமே சூப்பர் ஸ்டார் ஆகிட முடியாது என்று நயன்தாராவின் அம்மாவாக நடித்திருக்கும் ரேணுகா பேசும் டயலாக்கும், புடிச்சதை பண்ணினா லட்சத்துல ஒருத்தர் இல்ல, லட்சம் பேரும் சூப்பர் ஸ்டார் ஆயிடலாம் என்று நயன்தாரா பேசும் வசனமும் இந்த கதைக்கு அழுத்தம் சேர்ப்பதாக அமைந்துள்ளன.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!