
மனோரமாவின் மகன் பூபதி காலமானார்
நடிகர் விசுவின் "குடும்பம் ஒரு கதம்பம்" படத்தில் அறிமுகமான பூபதி, அதன் பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். மகனுக்காக தூரத்து பச்சை என்ற படத்தையும் மனோரமா தயாரித்தார். ஆனால் அது எடுபடவில்லை. சீரியல்கள் சிலவற்றிலும் பூபதி நடித்தார். இவரை திரையுலகில் அறிமுகப்படுத்தி பிரபலமாக்க மனோரமா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
பூபதிக்கு ராஜராஜன் என மகனும், அபிராமி, மீனாட்சி என்ற மகள்களும் உள்ளனர். நாளை இறுதி சடங்கு நடக்கிறது.
நடிகர் சங்கம் அஞ்சலி
சென்னை, தி. நகர் நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள மனோரமா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூபதி உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் மற்றும் நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!