
ஆரம்பிக்கலாங்களா... : கமல் 234 - நவ., 7 முதல் கொண்டாட்டம் துவங்குகிறது
அடுத்தாண்டு தான் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக இந்த படத்தின் அறிமுக வீடியோவை வரும் நவ., 7ல் கமல் பிறந்தநாளில் வெளியிட உள்ளனர். தற்போது அதற்கான வேலைகள் துவங்கி உள்ளன.
அதை குறிப்பிடும் வகையில் கமல், மணிரத்னம் ஆகியோரின் போட்டோக்களையும், பின்னணியில் கமல் 234 பட அறிவிப்பு பலகையும் உள்ள போட்டோவை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் உடன், ‛‛இந்திய சினிமாவின் ஒன்றுபட்ட சக்திகள், கொண்டாட்டம் தொடங்கட்டும்..."" என பதிவிட்டுள்ளனர். #HBDUlaganayaganNov7 என்ற ஹேஷ்டாக்கையும் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் கமல் பிறந்தநாளில் இந்த பட அறிமுக வீடியோ வெளியாவது உறுதியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!