
ஜனநாயகன் : தணிக்கை சான்றிதழ் விரைவில் வரும்…
ஆனால், படத்தின் தணிக்கை சான்றிதழ் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. அதை ரிவைசிங் கமிட்டி பார்க்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து நிதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் வரை சென்று பின் வழக்கை வாபஸ் பெற்றார்கள்.
தேர்தலுக்கு முன்பாக ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்தார்கள். ஆனால், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. அதற்குள் தேர்தலும் வந்ததால், அதையும் காரணம் காட்டி வழங்காமல் இருந்ததாக தகவல் வந்தது.
இதனிடையே, நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விஜய் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்குமா என்ற ஒரு நிலை உருவாகி உள்ளது. அதனால், "ஜனநாயகன்" படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
படத்தின் டைட்டில் கார்டில் விஜய் ரசிகர்கள் விருப்பப்படி "தமிழக முதல்வர் விஜய்" என இடம் பெறுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!