
கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா?
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா தமிழுக்கு வருகிறார். 2019ம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ், கார்த்தி கூட்டணியில் வெளிவந்த படம் "கைதி". இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இதில் கார்த்தி உடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கார்த்தி, அனுஷ்கா இருவரும் அலெக்ஸ் பாண்டியன் எனும் படத்தில் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!