
எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல்
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ""இந்த விளையாட்டில் பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். நான் ஆயிரத்தில் சம்பாதித்தபோது அதே ஆயிரத்துக்கு கடன் இருந்தது. லட்சத்தில் சம்பாதித்தபோது அதற்கு தகுந்த கடன் இருந்தது. தற்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன், ஆனாலும் அந்த கடன் பிரச்சினை என்னுடன் இருக்கத்தான் செய்கிறது. அதனால் அதனுடனேயே வாழ கற்றுக் கொண்டேன். வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வது தான் சவால்"" என்கிறார் விஜய் சேதுபதி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாஸ்க் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் "இந்த படத்தில் நடிக்க 10 நாள் என்று கூட்டிச் சென்று வச்சு செய்தார்கள். முழு சம்பளமும் தரவில்லை. இன்னும் சம்பளபாக்கி இருக்கிறது. அதை தந்தால் நன்றாக இருக்கும்" என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!