
100வது நாளில் தி கோட்
இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் சுமார் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இன்றுடன் இப்படம் 100வது நாளைத் தொட்டுள்ளது. 100 நாள் படங்கள் என்பதெல்லாம் இந்தக் காலத்தில் அபூர்வமாகிவிட்ட நிலையில் 100 நாளைத் தொடுவது சாதாரண விஷயமல்ல. சென்னை மதுரவாயலில் உள்ள எஜிஎஸ் தியேட்டரில் இந்தப் படம் 100 நாளைத் தொட்டுள்ளது.
இந்த வருடத்தில் 100வது நாளைத் தொட்டுள்ள இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு ராமராஜன் நடிப்பில் வெளிவந்த "சாமானியன்" படம் 100 நாள் ஓடியுள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!