
காந்தா முதல்..... காதல் காவியம் ஆரோமலே வரை இந்த வார ரிலீஸ்...!
காந்தா
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான், சமுத்திர கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் "காந்தா". இந்த திரைப்படம் நாளை(டிச.12ம் தேதி) நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஆரோமலே
இயக்குநர் சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ் ஷிவாத்மிகா, உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த காதல் திரைப்படம்"ஆரோமலே". கடந்த நவம்பர் 7ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் நாளை(டிச.12ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அந்தகாரா
இயக்குநர் வாசுதேவ் சனல் இயக்கத்தில், திவ்யா பிள்ளை, சந்துநாத் ஜி நாயர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கிரைம் த்ரில்லர் படம் "அந்தகாரா". இந்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை(டிச.12ம் தேதி) வெளியாகவுள்ளது.
பெமினிச்சி பாத்திமா
இயக்குநர் பாசில் முகம்மது இயக்கத்தில் பிரசீதா, ராஜி ஆர் உன்னி, பபிதா பஷீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் "பெமினிச்சி பாத்திமா". காமெடி திரைப்படமான இந்த படம் நாளை(டிச.12ம் தேதி) மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!