
பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார்
கதைப்படி சிவகுமாருக்கு சுஜாதாவுடன் திருமணம் நடத்திருக்கும், இருவரும் மகிழ்ச்சியாக வாழும் நேரத்தில் அவரது முன்னாள் காதலி அம்பிகா அவரைத் தேடி வருகிறார். அவருக்கும் வாழ்க்கை கொடுக்க வேண்டிய கட்டாயம் சிவகுமாருக்கு.
அதனால் அவருக்கு தனியாக வீடு எடுத்து கொடுத்து சின்னவீடாக வைத்துக் கொள்வார் சிவகுமார். அம்பிகாவின் வீட்டிற்கு சென்றாலே ரொமான்ஸ்தான் இருவரும் கட்டிலில் தாரளமாக கட்டிப்பிடித்து புரள்வார்கள். "வா... மாலை நேரம்" என்ற பாடல் காட்சியில் சிவகுமாரின் முகத்தையெல்லாம் அம்பிகா கடிப்பார்.
இந்த படம் "கார்த்திகை தீபம்" என்ற படத்தின் ரீமேக். தெலுங்கு படத்தில் உள்ள காட்சிகளை அப்படியே படமாக்கியதால் வந்த ரொமான்ஸ் இது. இந்த படத்தை ஏ.ஜெகநாதன் இயக்கி இருந்தார். கங்கை அமரன் இசை அமைத்திருந்தார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!