பிளாஷ்பேக் : மூன்று சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்தும் சோபிக்காத மாலதி
மே 30, 2025
Advertisement
பழம்பெரும் நடிகைகளில் அதிகம் அறியப்படாதவர் கே.மாலதி. 1926ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஏலூரில் பிறந்தார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த இவர் "பாதாள பைரவி" படத்தில் என்.டி. ராமராவுக்கு ஜோடியாக நடித்தார். கன்னட சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் "காளகஸ்தி மகாத்மியம்" என்ற படத்தில் நடித்தார். "ராஜகுமாரி" படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஜோடியாக நடித்தார். இப்படி மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்த பிறகும் மாலதி ஏனோ அதிக படங்களில் நடிக்கவில்லை.
பாதாள பைரவி, நீதிபதி, யாருக்கு சொந்தம், ரத்னகுமார் போன்ற பல தமிழ் படங்களிலும் பாக்கியலக்ஷ்மி, ஸ்ரீ கலகஸ்தீஸ்வர மஹாத்யம், அம்மே எவரு, பெல்லி கானுகா, குணசுந்தரி கதா, பக்த போதனா போன்ற பல தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.1946ம் ஆண்டு வெளியான “ஸ்ரீ முருகன்” படத்தில் எம்.ஜி.ஆர் - மாலதி ஆடிய சிவ பார்வதி நாட்டிய நடனம் அன்றைய ரசிகர்களை மகிழ்வித்தது. இப்படத்தில் கதாநாயகியும் இவரே. குறுகிய காலத்திலேயே குணச்சித்திர வேடங்களில் நடித்த மாதத்தில் பின்னர் திரைப்படங்களில் இருந்து விலகினார்.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!