
விரைவில் எப்ஐஆர் 2 உருவாகிறது : விஷ்ணு விஷால் அறிவிப்பு
ஜன 16, 2023
Advertisement
கட்டா குஸ்தி படத்தை அடுத்து ஆரியன், லால் சலாம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இதில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தின் மூலம் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்கப் போகிறார் விஷ்ணு விஷால். இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையில் உருவாகிறது. மேலும் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் எப்ஐஆர் நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தை மனு ஆனந்த் இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் எப் ஐ ஆர்- 2 படம் விரைவில் உருவாக இருப்பதாகவும், இந்த படத்தை வி வி ஸ்டுடியோஸ் தயாரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!