
லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு
கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தது லைகா தயாரிப்பு நிறுவனம். ரஜினியின் 2.0, தர்பார், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளது. அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் 171வது படம் என அடுத்தடுத்து பல படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தில் சட்ட விரோத பணபரிமாற்றம், வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்துள்ளது. சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!