
கூலியில் ஏற்பட்ட மனக்குறை : ரெபோ மோனிகா ஜான் ஆதங்கம்
ஆனாலும் ரஜினி படம் என்பதாலும் லோகேஷ் கனகராஜ் டைரக்சன் என்பதாலும் இந்த படத்தில் சிறிய காட்சி என்றாலும் கூட உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று படம் வெளியாவதற்கு முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் இப்படி கொஞ்ச நேரமே வந்து போகும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததில் தனக்கு கொஞ்சம் மனக்குறை தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “உண்மையிலேயே நான் இந்த படத்தில் நடித்தபோது ஏமாற்றம் அடைந்ததோடு கொஞ்சம் அப்செட்டும் ஆனேன். எனக்கு தெரியும் இன்னும் கொஞ்சம் அதிகமாக எனக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று. ஆனால் சில நேரங்களில் நாம் நினைத்தது போல நடக்காது. இருந்தாலும் தலைவர் ரஜினிகாந்த் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி தான்” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!