
எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லையா விடாமுயற்சி?
ஆனால், வார நாளின் முதல் நாளான திங்களன்று படத்தின் வசூல் வெகுவாகக் குறைந்தது. அதன்பின் செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை நாள் என்பதால் வசூல் சுமாராக இருந்தது. அதே சமயம் நேற்று மீண்டும் வசூல் குறைந்துள்ளது. இன்று இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ள "விடாமுயற்சி" படத்தின் வசூல் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 200 கோடி வசூலைக் கடந்தால் அதுவே பெரிய விஷயம் என்கிறார்கள்.
படத்தின் பட்ஜெட் 300 கோடி வரை இருக்கும் என்பதுதான் தகவல். அது உண்மையென்றால் வசூல் ரீதியாக படம் தோல்வியைத் தழுவவே வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறார்கள். விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "தி கோட்" படத்தின் வசூலான 400 கோடியை இப்படம் கடக்க வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது நடக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!