
கருப்பு : சூப்பர் ஹீரோவாக நடிக்கும் சூர்யா
படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா சூப்பர் பவர் ஹீரோவாக நடிப்பதாக இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: கருப்புசாமி நம் தமிழ் மண்ணோட சாமி. எல்லா மதங்களையும் தாண்டி அய்யனார், முனி, கருப்புசாமி என்று ஊர் வாசலில் பிரமாண்டமாக எழுந்து நிற்பார்கள். மக்கள் உள்ளே வெளியே வந்து போகும்போது "கருப்பு... கூட வாப்பா" என்று வேண்டிக் கொண்டு செல்வார்கள்.
ஆபத்தான காலகட்டத்தில் உலகம் இருக்கும்போது, அதை தீர்ப்பதற்கு சூப்பர் பவர் ஹீரோ வந்தால் எப்படி இருக்கும்? அந்த ஆபத்துக்களை எல்லாம் அடித்துத் துவைத்து, சாமியாடி, தீமையை வீழ்த்தி நல்லதை நிலைநாட்டினால் எப்படியிருக்கும் என்பதை ஜனரஞ்சகமாக, அதிரடியாக சொல்லும் படமாக உருவாகி உள்ளது என்கிறார் பாலாஜி.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!