
தீபாவளிக்கு ரஜினி - அஜித் மீண்டும் மோதல்?
இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைக்கு வருவது உறுதியாகி விட்ட நிலையில், அஜித்தின் வலிமை தீபாவளிக்கு வெளிவருமா? வராதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
தற்போது ஒருவழியாக வலிமை பிரமோசனை தொடங்கியுள்ள தயாரிப்பாளர் போனிகபூர் இதுவரை படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தவில்லை. என்றபோதும், தீபாவளிக்கு படத்தை வெளியிட தயாராகி விட்டதாகவே தெரிகிறது. அப்படி ஒருவேளை இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்தயும், அஜித்தின் வலிமையும் வெளியானால், மிகப்பெரிய எதிர்பார்ப்பும், யார் யாரை முந்தப்போகிறார்கள்? என்கிற பரபரப்பு நிலவும் சூழல் உருவாகும்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!