
சாதி, மதங்களை பார்க்காமல் குழந்தைகளை படிக்க வையுங்க: நடிகர் சதீஷ்
நாய்சேகர் படத்திற்கு பிறகு ‛சட்டம் என் கையில்" என்ற படத்தை முடித்துள்ளோம்; அது ஒரு நல்ல திரில்லர் படமாக இருக்கும். லோகேஷ் கனகராஜின் இணை இயக்குனர் வெங்கி இயக்கும் வித்தைக்காரன் படம் அடுத்த வெளியீடாக இருக்கும். அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது. ஓடிடி மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கிறது, நல்ல தொழிலாகவும் இருக்கிறது. தியேட்டர் ரெஸ்பான்ஸ் நன்றாக இருக்கும்.
திரைபட்டங்களில் உள்ள விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். தேவர் மகன் திரைப்படம் தனக்கு மிகவும் படித்த படம் , இறுதியில் வரும் வன்முறை வேண்டாம், சாதி, மதங்களை பார்க்காமல் குழந்தைகளை படிக்க வையுங்கடா என்ற நல்ல கருத்தை மட்டும் அதில் நான் எடுத்துக்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!