
வில்லன் நடிகர் தீனாவின் அதிரடி முடிவு : குடும்பத்துடன் மதம் மாறல்
நவ 09, 2022
Advertisement
கமல்ஹாசனின் "விருமாண்டி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சாய் தீனா. தொடர்ந்து கொம்பன், தெறி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டியிருக்கிறார். அதேசமயம் நிஜத்தில் இவரை பலருக்கும் பிடிக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் சாய் தீனா, தொடர்ந்து சமூகம் குறித்து மிகுந்த அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் பேசி வருகிறார். பேச்சோடு மட்டுமல்லாமல், தனது பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், மாணவர்கள் தவறான வழியில் செல்லக்கூடாது என்பதற்காக தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். கொரோனா காலத்தில் கூட வீடுகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்தார். இந்நிலையில், சாய்தீனா, பிக்கு மெளரியா முன்னிலையில் 22 உறுதிமொழிகளை ஏற்று தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார். அவரது இந்த அதிரடி மதமாற்றம் சோஷியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!